பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் 15 ஆவது மாநாடு இன்று தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்கா சென்றார். இந்த நிலையில் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த மாநாட்டின் முடிவில் பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.