சர்வாதிகாரியாக வட கொரியாவில் ஆட்சி நடத்திவரும் கிம், அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்கு தெரியாமல் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு என வடகொரியா அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது 3 நாட்களில் மட்டும் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவகாரகுழு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை.