நான் சிறிதும் தயங்க மாட்டேன்: ஏமன் மீதான தாக்குதல் குறித்து ஜோ பைடன் விளக்கம்..!

Mahendran
வெள்ளி, 12 ஜனவரி 2024 (12:55 IST)
ஏமன் மீது திடீரென அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்திய நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார். 
 
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் ஊடுருவி கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய நடவடிக்கைகளை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
சர்வதேச வர்த்தகம் தடையின்றி இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நான் சிறிதும் தயங்க மாட்டேன். கப்பல் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
 
உலகின் மிக முக்கியமான வணிக பாதையில் செல்லும் சுதந்திரத்தை தடை செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்பது இந்த தாக்குதல் மூலம் தெளிவாகி இருக்கும் என ஏமன் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்