அமெரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில், ஓரிகான் மாகாணத்தில் மெட்போர்டு நகரில் அசாந்தே ரேக் மண்டல மருத்துவ மையத்தில், 10 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.
இதுகுறித்து நடந்த விசாரணையில், சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை, வலி நிவாரண மருந்தான பென்டனைல் மருந்திற்கு பதிலாக கொடுத்ததில், தொற்றுப் பாதித்ததில், 10 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்போர்டு காவல்துறையின் அதிகாரி ஜெப் கிர்க்பேட்ரி, நோயாளிகளின் நலனுக்கு எதிராக இது செயல்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு ஏற்பட்ட பாதிபுகள் பற்றி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.