காதலுக்காக அரச குடும்பத்தை கைவிட்ட பெண்: தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (08:12 IST)
காதலுக்காக அரசு அந்தஸ்தை கைவிட்ட ஜப்பான் முன்னாள் இளவரசி தனது கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார். 

 
ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார். ஆனால் ஓர் அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்பத் தகுதியை இழக்கமாட்டார்.
 
ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு 150 மில்லியன் யென் (சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்) பணம் கொடுப்பது வழக்கம். இதையெல்லாம் வேண்டாம் என புறம்தள்ளி ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
 
தற்போது அரச குடும்பத்தின் அந்தஸ்தை இழந்துள்ள அவர் தனது கணவர் கெமுரோவுடன் நியூயார்க் வந்தடைந்தார். கெமுரோ சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் இவர்கள் நியூயார்க்கில் வாடகை வீடு எடுத்து தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்