நெப்டியூனா இது.. என்னமா ஜொலிக்குது..! – ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஜேம்ஸ்வெப் போட்டோ!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (10:42 IST)
நாசா விண்ணுக்கு அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த நெப்டியூனின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் உள்ள பிற பால்வெளி அண்டங்கள், பெரிய நட்சத்திரங்கள், நெபுலா உள்ளிட்டவற்றை ஆராய ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.

விண்வெளி சென்ற ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் இதுவரை மனித இனம் காணாத பல கேலக்சிகளையும், கோள்கள், நெபுலா உள்ளிட்டவற்றையும் படம் பிடித்து அனுப்பியது. 

ALSO READ: வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடு! – மத்திய அரசு அதிரடி!

தற்போது ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி சூரிய குடும்பத்தை சேர்ந்த நெப்டியூனை படம் பிடித்துள்ளது. நெப்டியூனை சுற்றியுள்ள தூசி படலங்களுடன் அதன் வளையங்களும் இந்த படத்தில் தெளிவாக தெரிகின்றன. நெப்டியூனின் 14 நிலவுகளில் 7 நிலவுகள் படத்தில் தென்படுகிறது. உறைநிலை கோளான நெப்டியூனின் ஜொலிக்கும் புகைப்படம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

1989ம் ஆண்டில் நாசா அனுப்பிய வாயேஜர் விண்கலம் நெப்டியூனை கடந்து சென்றபோது எடுத்த புகைப்படத்தில் நெப்டியூனின் வளையங்கள் தென்பட்டன. அதன்பிறகு தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்