இந்த நிலையில், இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அதன்பின், இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, போலீஸார், கேரளா இளைஞர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய புதுச்சேரி இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.