லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

Senthil Velan
திங்கள், 23 செப்டம்பர் 2024 (19:25 IST)
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  இந்த தகுதலில் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 
 
இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், லெபனானில் திங்கள்கிழமை இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். மேலும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  எல்லை தாண்டிய மோதல்களில் கடந்த ஓராண்டில் இதுவே ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பாகும்.


ALSO READ: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

இதனிடையே இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் நஜீப் மிகாதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற நாடுகளை கேட்டுகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்