பேஜரை அடுத்து வெடித்த வாக்கிடாக்கி.. 14 பேர் பலி.. லெபலானில் பெரும் பதட்டம்..!

Siva

வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:24 IST)
லெபனான்  நாட்டில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்ததில்   8 பேர் உயிரிழந்ததாகவும், 2750 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அதே நாட்டில் பேஜரை அடுத்து வாக்கி டாக்கிகள் வெடித்துள்ளது.

இந்த நிகழ்வில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 300 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஹிஸ்புல்லா உறுப்பினர்களா அல்லது அதில் பொதுமக்களும் உள்ளனரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருக்கு நேற்று ராணுவ படையினரிடம் உரையாற்றிய போது, "நாம் போரின் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். அதற்கு தைரியம், உறுதிப்பாடு, விடாமுயற்சி தேவை," என்று குறிப்பிட்டுள்ளார். பேஜர் மற்றும் வாக்கி டாக்கி வெடிப்பைதான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டதாக லெபனான் குற்றம் சாட்டியுள்ளது.

பேஜர் மற்றும் வாக்கி டாக்கி வெடிப்பு நிகழ்வை ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை தலைவர் கண்டித்துள்ளார். மக்கள் அமைதி மற்றும் பாதுகாப்போடு வாழ்வதற்கான உரிமையை பாதுகாக்க உலக தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்