இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பை இவரின் சொத்து மதிப்பு அதிகமா? எழுந்தது சர்ச்சை!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (15:45 IST)
இந்திய மென்பொருள் நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனரின் மகள் அக்‌ஷ்தாவின் சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியை விட அதிகம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சருமான ரிஷி சுனாக் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான நாராயணமூர்த்தியின் மகளான அக்‌ஷதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ரிஷி தனது மனைவியின் சொத்து மதிப்பை இங்கிலாந்து அரசிடம் அறிவிக்கவில்லை என்று த கார்டியன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட செய்தியின் படி அக்‌ஷதாவின் சொத்து மதிப்பு 4200 கோடி ரூபாய். இது இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணியின் சொத்தை விட 800 கோடி ரூபாய் அதிகம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்