கொரோனாவுல பட்டும் திருந்தல.. ஆட்கொல்லி வைரஸ் ஆய்வில் சீனா? – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Prasanth Karthick
வியாழன், 18 ஜனவரி 2024 (09:04 IST)
உலகை உலுக்கிய கொரோனா வைரஸிலிருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் 100% மனிதர்களை கொல்லக்கூடிய புதிய வைரஸ் குறித்து சீனா ஆய்வில் ஈடுபட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து மனிதர்களை பாதித்து மரணத்திற்கு இட்டு செல்லக்கூடிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பெரும் போராட்டங்களுக்கு பின் தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கு மூலமாக கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.

தற்போது கொரோனா ஜே.என் வகை மாறுபாடு அடைந்த பாதிப்புகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆங்காங்கே கண்டறியப்பட்டே வருகிறது. இந்த சூழலில் சீனா மீண்டும் ஒரு ஆட்கொல்லி வைரஸ் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் மூல குடும்பமான சார்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த புதிய வைரஸ் மனிதர்களை 100% கொல்லக்கூடியது என கூறப்படுகிறது

இந்த வைரஸை சீன ஆய்வாளர்கள் சில எலிகள் மீது பரிசோதித்து பார்த்து வெற்றி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பரவியபோதே அது சீனாவின் வைரஸ் ஆய்வு மையத்திலிருந்து பரவியதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டின. ஆனால் அதற்கு சீனா சரியான பதிலை தரவில்லை. இந்நிலையில் சீனா புதிய வைரஸ் குறித்து ஆய்வில் இறங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்