2 மாசமா தூங்காம ஸ்கெட்ச் போட்ட இஸ்ரேல்? ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி?

Prasanth Karthick
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:07 IST)

ஈரானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் வெடிக்குண்டு வெடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதை இஸ்ரேல் திட்டமிட்டு செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
 

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக தீவிர யுத்தம் நடந்து வருகிறது. இந்த யுத்தத்தில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கிளர்ச்சி குழு, ஈரான் நாடு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. ஹமாஸ் அமைப்பின் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் இஸ்மாயில் ஹனியி. இவரை இஸ்ரேல் நெடுநாட்களாக உளவு பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் ஈரானில் நடைபெற்ற அதிபர் பதவியேற்பு விழாவில் இஸ்மாயில் ஹனியி கலந்து கொண்டார். டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் இஸ்மாயில் தங்கியிருந்த நிலையில் திடீரென அந்த அறையில் வெடிச்சத்தம் கேட்டது. அந்த வெடி விபத்தில் இஸ்மாயில் இறந்து போனார். இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து நெடு நாட்களாக திட்டமிட்டு இஸ்மாயில் தங்கபோகும் அறையை முன்னமே கண்டுபிடித்து வெடிக்குண்டிகளை மறைத்து வைத்திருந்ததாக முன்னதாக தகவல்கள் பரவியது.

 

இந்நிலையில் தற்போது ஈரான் அளித்துள்ள விளக்கத்தில், இஸ்மாயில் அறையில் வெடிக்குண்டுகள் வெடிக்கவில்லை என்றும், ராக்கெட் வெடிக்குண்டு தாக்குதலிலேயே இஸ்மாயில் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உதவியுடன் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இஸ்மாயில் தங்க போகும் கட்டிடத்திற்கு அருகே திட்டமிட்டு சிறிய ராக்கெட்டை நிலைநிறுத்தி சரியான அறை மீது ஏவி தாக்கி கொன்றுள்ளதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது ஈரான் நாட்டிற்குள்ளேயே புகுந்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஈரான் நாடு இஸ்ரேலுக்கு எதிரான போரில் தீவிரம் காட்டி வருவதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்