கமலா ஹாரிஸ் இந்தியரா? ஆப்ரிக்க அமெரிக்கரா? பதில் சொல்ல வேண்டும்: டிரம்ப்

Siva

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (11:23 IST)
கமலா ஹாரிஸ் சில சமயம் தன்னை இந்தியர் என்றும் மற்றொரு சமயம் தன்னை ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றும் கூறிக்கொள்ளும் நிலையில் அவர் இந்தியரா அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கரா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என அமெரிக்க  அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் டிரம்ப் மற்றும்  கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த நிலையில் டிரம்ப் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது  கமலா ஹாரிஸ் தன்னை ஆப்பிரிக்க அமெரிக்கர் என்று வெளிப்படுத்துவதை விட இந்திய வம்சாவளி என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்.
 
பின்னர் திடீரென தன்னை ஆப்பிரிக்க அமெரிக்கர் என காட்டிக்கொள்கிறார். அவரின் எந்த அடையாளம் உண்மை? அவர் இந்தியரா? அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கரா என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே அமெரிக்க அதிபராக ஒபாமா  தேர்தலில் போட்டியிட்ட போதும், அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை என குற்றம் சாட்டு எழுந்தது. தற்போது அதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை தான்  கமலா ஹாரிஸ் மீதும் ட்ரம்ப் முன் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்