ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உடனே வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் என்பவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் லெபனானில் உள்ள இந்தியர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து இந்திய தூதரகம் தனது சமூக வலைதள பக்கத்தில் லெபனான் பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே லெபனானில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.