23அடி மலைப்பாம்பை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (12:51 IST)
இந்தோனேசியாவில் சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய 23அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கிராமத்து மக்களுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்தோனேசியா சுமத்ரா தீவில் மலைபாம்பு ஒன்று சாலையில் கிடந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. ராபர்ட் நாபாபன் என்ற பாதுகாப்பு அதிகாரி அந்த வழியே சென்றுள்ளார். அவருடன் கூடுதலாக இரண்டு பேர் சேர்ந்து அந்த மலைபாம்பை சாலையில் அகற்ற முயற்சித்துள்ளனர்.
 
இதில் அந்த பாதுகாப்பு அதிகாரியின் கையில் மலைபாம்பு அதன் கூர்மையான பற்களால் கடித்ததில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மலைபாம்பு கொல்லப்பட்டு பனை எண்ணெய் தோட்டத்தில் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரி மற்றும் அந்த கிராமத்தை சேர்தவர்கள் ஒன்றுச்சேர்ந்து அந்த மலைபாம்பை அடித்து கொன்றுவிட்டனர்.
 
இந்த 23அடி நீளம் கொண்ட மலைபாம்பு ஒரு வளர்ந்த முழு பன்றி அல்லது மனிதனை விழும் ஆற்றல் கொண்டது என தெரிவிக்கப்பட்டது. கொல்லப்பட்ட மலைபாம்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்