விமானத்தில் இருந்து கீழே விழுந்து பலி !

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (17:12 IST)
ஆப்கானிஸ்தானை முழுமையாக தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து தப்பித்தால் போதுமெனெ அமெரிக்கப் போர் விமானத்தின் அர் பகுதி அருகே அமர்ந்து பயணித்த 3 பேர் கீழே விழுந்து பலியாகினர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்கள் கை உயர தொடங்கியது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலீபான்கள் நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து ஆட்சியை விடுத்து தலைமறைவாகியுள்ளார் அந்நாட்டு அதிபர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழும் பிறநாட்டு மக்களை திரும்ப வரும்படி அந்தந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக சிறப்பு விமானங்களை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அனுப்ப தொடங்கியுள்ளன. இதனால் வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிர கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கும்பல் கும்பலாக இரவிலிருந்து தங்கள் நாட்டு விமானங்களுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூர் நகரில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்ட  போர் விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில்,  டயர் மீது அமர்ந்து மூவர் பயணம் செய்தனர். பின்னர் அவர்கள் மூவரும் கீழே விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை மாற்றியுள்ளது தலீபான்கள் அமைப்பு. இனி ஆப்கானிஸ்தான் என்பதற்கு பதிலாக இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று அழைக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தலீபான்கள் ஆட்சிக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
         

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்