லண்டன் இந்திய தூதரகத்தில் இந்திய தேசிய கொடியை அவமதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் காலிஸ்தான் ஆதரவு மத போதகர் அம்ரித் பால் சிங் என்பவர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நிலையில் இருந்த அவருடைய மகனின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் அதிகரிக்க தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திற்கு துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள லண்டன் இந்திய தூதரகம் முன் குவிந்த காலிஸ் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தேசிய கொடிய அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.