குட்டு வைக்கும் அமெரிக்கா.. கூட்டு சேரும் இந்தியா! – விழிபிதுங்கும் உலக சுகாதார அமைப்பு?

Webdunia
திங்கள், 18 மே 2020 (09:30 IST)
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளது.

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தர்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா சிறப்பாகவே செயல்பட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. ஆனால் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கான நிதியையும் நிறுத்தியது.

இந்நிலையில் கொரோனா நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா உலக சுகாதார சட்டமன்றத்திடம் வரைவு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. ஒருபக்கம் உலக சுகாதார அமைப்பின் மீதான இந்த மதிப்பாய்வு நடவடிக்கைகளை இந்தியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுள்ள நிலையில் மறுபுறம் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சீனாவை கொரோனா பரவுதலுக்கு முக்கிய காரணமாக குற்றம் சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்