3 வாரத்தில் முட்டையை அடைகாத்து குஞ்சு பொரித்த ஆண்!!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (16:10 IST)
பிரான்ஸ் வினோதமான செயல்களால் மக்களின் கவனங்களை ஈர்த்து வருபவர் ஆப்ரஹாம் பாய்ன்செவல்.


 
 
இவர் தற்போது கோழிமுட்டைகளை தன்னால் அடைகாத்துப் பொரியவைக்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார்.
 
பாரிஸில் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் மூன்று வாரங்கள் முட்டைகளின் மேல் அமர்ந்து அடைகாத்துள்ளார் ஆப்ரஹாம்.
 
அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டகத்துக்குள், வெப்ப நிலையை அதிகரிக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டு அதன் உள்ளேயே உறங்கியுள்ளார். 
 
ஆபிரகாமின் இந்த செயலுக்கு விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்