மோடிக்கிட்ட பேசுனேன்.. ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா நிறுத்துகிறது! - ட்ரம்ப் மகிழ்ச்சி!

Prasanth K

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (08:31 IST)

ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தால் இந்தியா மீது ட்ரம்ப் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது அதை நிறுத்திக் கொள்ள இந்தியா முன் வந்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வணிகத்திற்காக இந்தியா மீது 50 சதவீதம் பரஸ்பர வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். எனினும் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில் சமீபமாக அமெரிக்கா - இந்தியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா அறிவுறுத்தி வந்தது.

 

இந்நிலையில் இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப் “நேற்று பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தை நிறுத்தப் போவதாக இந்தியா என்னிடம் கூறியுள்ளது. இதை உடனே செய்துவிட முடியாது. அதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணெய் வணிகம் முடிவுக்கு வரும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்