பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், பதவியிலிருந்து விலகிய பிறகு பல்வேறு புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார். கோல்ட்மேன் சாக்ஸ், மைக்ரோசாஃப்ட், ஏஐ ஸ்டார்ட்அப் ஆந்த்ரோபிக் ஆகிய நிறுவனங்களுக்கு அவர் மூத்த ஆலோசகராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது ஒரு பத்திரிகைக்கு கட்டுரை எழுத்தாளராகவும் புதிய வேலையை ஏற்றுள்ளார்.
அடுத்தடுத்து வேலைகளை குவிக்கும் அவரது செயல், சமூக ஊடகங்களில் நகைச்சுவைக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று வாதிடும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பதால், கிண்டல்கள் அதிகரித்துள்ளன.
சுனக்கின் இந்த பணி பட்டியலை வைத்து, அவரை "மிக அதிக வேலைவாய்ப்பு பெற்ற மனிதர்" என்றும், "ஏஐ-யை விட அதிக வேலைகளைப் பறிப்பவர்" என்றும் எக்ஸ் பயனர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.