
இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலையில் 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் முதலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்த நிலையில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
Edit by Prasanth.K