
உலக வெப்பமயமாதலால் ஐஸ்லாந்து நாட்டில் முதல்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பல கண்டங்களிலும், தீவுகளிலும் மனிதர்கள், உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனாலும் சில உயிரினங்கள் தவிர்த்து அதிக உயிரினங்கள் வாழ முடியாத பகுதிகளும் பூமியில் உள்ளன. அப்படியாக கொசுக்கள் சுத்தமாகவே இல்லாத பகுதிகளாக அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து இருந்து வந்தது.
ஆனால் பூமி வெப்பமயமாதல் விளைவாக இந்த நிலை மாறியுள்ளது. குளிர் பகுதியான ஐஸ்லாந்தில் இதுவரை கொசுக்களே இல்லாத நிலையில் முதல் முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக கொசுக்கள் அதிகுளிர் வாய்ந்த பகுதிகளில் வசிக்கவோ, இனப்பெருக்கம் செய்யவோ முடியாத நிலையில், ஐஸ்லாந்தில் தோன்றியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால் ஐஸ்லாந்தின் பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K