இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

Siva

வியாழன், 23 அக்டோபர் 2025 (13:57 IST)
மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் நடந்த ஆட்குறைப்பில் பாதிக்கப்பட்ட 600 ஊழியர்களில் ஓர் இந்திய பெண்ணும் அடங்குவார். பிப்ரவரி மாதம் ஆராய்ச்சி விஞ்ஞானியாச் சேர்ந்த இவர், ஒன்பது மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
பணிநீக்கம் செய்யப்பட்ட தகவலை அவர் 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் பதிவிட்டு, வேலை வாய்ப்பு தேடினார். தான் எச்-1பி விசாவில் இருப்பதாகவும், புதிய நிறுவனத்தில் விசா ஸ்பான்சர்ஷிப் தேவை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே, பல சிறிய ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளிடமிருந்து இவருக்கு வேலைக்கான அழைப்புகள் குவிந்தன. மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் கூட தங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
 
உயர் தொழில்நுட்ப துறையில் உள்ள இந்திய திறமைகளுக்கு அமெரிக்காவில் இன்றும் அதிக மதிப்பு உள்ளது என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய வேலையைக் கண்டுபிடிக்க இந்த பெண்ணுக்கு மெட்டாவில் இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்