இத்தாலியில் ஒரு யூரோவுக்கு வீட்டை ஏலம் விட்டும் அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.
இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது சலேமி நகரம். 1968ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு, சலேமி நகரத்தை விட்டு மக்கள் வெளியேற ஆரம்பித்தனர். அதனால் அந்த பகுதியில் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து இப்போது அந்த நகரத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு வீட்டை ஒரு யூரோ (இந்திய மதிப்பில் 87 ரூபாய்) என ஏலம் விட்டுள்ளனர்.
ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அப்போதும் பெரிய அளவில் யாரும் வீடுகளை வாங்க முன் வரவில்லையாம்.