சீனாவில் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்.. டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல்..!

Siva
செவ்வாய், 23 ஜனவரி 2024 (07:58 IST)
சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் நேற்று இரவு திடீரென 7.2 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் ஜின்ஜியாங் மாகாணத்தின் வடக்கே உள்ள தோஷோட் என்ற நகரத்திற்கு அருகில் இருந்ததாகவும், நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் பல வீடுகள் இடிந்து விழுந்து பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சீன அரசு ஆய்வு செய்து வருவதாகவும், பொதுமக்கள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கூறுகின்றன. 
 
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய சீன அரசு அவசர நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, மருந்து மற்றும் உயிர்காக்கும் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
 
சீனாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.9 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 87,00 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
 
சமீபத்தில் ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது சீனாவிலும் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்