யார் காலில் யார் விழுவது..!? ராகவா லாரன்ஸ் திடீர் மனமாற்றம்!

ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (13:46 IST)
பிரபல தமிழ் நடிகரான ராகவா லாரன்ஸ் உதவி செய்பவர்கள் காலில் விழுவது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் பல படங்களில் நடித்தும் இருந்தார். முனி படத்தை இயக்கி, நடித்ததன் மூலம் மேலும் புகழ்பெற்ற இவர் முனி சிரிஸில் பல படங்களை எடுத்து வருகிறார்.

நடிப்பை தாண்டி பொதுநல செயல்பாடுகளிலும் லாரன்ஸ் ஆர்வம் காட்டி வருகிறார். மாற்றுத்திறனாளிகள், அனாதைகளுக்கான பல்வேறு உதவிகளையும் தொடர்ந்து செய்து வருபவர் அதற்கான ட்ரஸ்ட்டையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ் “என் வாழ்க்கையில் ஒரு மாற்றம். இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையை செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்