18 வயது குற்றவாளியை பிடிக்க உதவிய தைரியமான முதியவர்

Webdunia
ஞாயிறு, 6 மே 2018 (17:58 IST)
அமெரிக்காவில் ஒஹியோ மாகாணத்தில் 18 வயது குற்றவாளி ஒருவன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கையில் முதியவர் ஒருவர் லாவகமாக அந்த குற்றவாளியை பிடிக்க உதவிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
18 வயது இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஒஹியோவின் பிசியான பகுதியில் ஓடிக்கொண்டிருந்தார். அவரை பிடிக்க போலீசார் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்
 
இந்த நிலையில் தனது பேத்தியுடன் வாக்கிங் வந்திருந்த முதியவர் ஒருவர் வெகுலாவகமாக ஓடிக்கொண்டிருந்த இளைஞனின் காலை தட்டிவிட்டு கீழே விழச்செய்தார். அதனால் தடுமாறி அந்த இளைஞன் கீழே விழுந்ததோடு அவன் கையில் இருந்து துப்பாக்கியும் கைநழுவியது. அந்த சமயத்தில் அவனை விரட்டி கொண்டிருந்த போலீசார், அந்த இளைஞனை சுற்றி வளைத்து கைது செய்தனர். 
 
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் குற்றவாளியை பிடிக்க உதவிய அந்த முதியவருக்கு போலீசார் நன்றி கூறினர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்