ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறிய கூகிள் பே! – ஐபோன் யூசர்ஸ் அவதி!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (13:30 IST)
அதிகளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் கூகிள் பே சில காரணங்களால் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது பண பரிவர்த்தனை மற்றும் பயன்பாட்டுக்கு பேடிஎம், போன்பே, கூகிள் பே போன்ற மொபைல் செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானதாக கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே செயலி உள்ளது.

இந்த செயலி கூகிளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் மொபைல்களின் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றின் மூலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஸ்டோரில் கூகிள் பே பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களால் கூகிள் பே செயலி ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால் கூகிள் பே பயன்படுத்தும் ஆப்பிள் மொபைல் பயனாளர்கள் பணபரிவர்த்தனை செய்வதில் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்