மாணவியின் கக்கம் புகைப்படம்: இணையதளத்தில் சர்ச்சை

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (10:46 IST)
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த தத்துவவியல் மாணவி ஒருவர் தனது கக்கம் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தால் சமூக வலைதளத்தில் பெரிய போர் ஒன்று நிகழ்ந்துள்ளது.


 


 
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லாரா டி என்பவர் தத்துவவியல் படித்து வருகிறார். இவர் அண்மையில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
 
அந்த புகைப்படத்தில் அவர் அக்குளில் முடியுடன் காணப்பட்டார். அந்த புகைப்படத்திற்கு அவர் குறிப்பிட்டு இருந்த பதிவில் கூறியதாவது:-
 
பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த மற்றவர்களின் ஆலோசனையில் தான் இயங்க வேண்டுமா. அக்குளில் முடியில்லாமல் காணப்பாட்டால் தான் அழகு என்பது கிடையாது. என் உடல் என் உரிமை என்று பதிவிட்டிருந்தார்.
 
இந்த பதிவிற்கு ஃபேஸ்புக்கில் ஏராளமான எதிர்ப்புகள் வந்தன. மிக மோசமான கருத்துகள் எல்லாம் தெரிவிக்கப்பட்டன. இதனால் அவர் விரத்தி அடைந்து பெண்ணியல் வாதிகளின் ஆதரவை திரட்டினார். 
 
அதன்பின்னரே அவருடைய பதிவிற்கு சில நல்ல கருத்துகள் வந்தது. மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பதிவினை நான் செய்தேன் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்