அதிமுகவுக்கு எதிராக டி20 மேட்ச் ஆட வியூகம்; குதிரைபேரம் இல்லன்னா குறிவைக்கும் பேரம்!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (09:45 IST)
அதிமுக அரசு இந்த முறை ஆட்சி அமைத்த பின்னர் அதன் ஆட்சிக்கு சைலண்ட் பாமாக இருப்பவர்கள் இரு பண பலம் படைத்தவர்கள் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


 
 
எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த இரு சைலண்ட் பாமும் வெடிக்கலாம் என்பதால் அதிமுக அரசு சற்று கவனமுடனே இருக்கின்றன அதன் அரசியல் நகர்வுகள்.
 
மணல் மனிதருக்கு எதிராக தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் அதிமுக அரசு, கல்வி நிறுவணம் வைத்திருக்கும் மற்றொரு பணபலம் மிக்க மனிதரையும் சிறையில் வைத்திருக்கிறது.
 
இந்த இரு தரப்பினரும் அதிமுக அரசுக்கு எதிராக தங்கள் பணபலம் மூலமாக நெருக்கடி கொடுக்க இருப்பதாக, உளவுத்துறை முதல் அரசியல் நோக்கர்கள் வரை அனைவரும் சந்தேகிக்கின்றனர்.
 
அதிமுக அரசு தற்போது 20 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே அதிகம் வைத்துள்ளதால், 20 எம்.எல்.ஏ.க்களை எப்படியாது பேரம் பேசி தங்கள் பணத்தால் மயக்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும் என அதிமுகவுக்கு சவால் விட நேரம் குறித்துக் கொண்டிருக்கின்றனர்.
 
இந்த இரு பண முதலைகள் மீதும் கை வைத்த அதிமுக அரசு அவர்களின் எதிர் தாக்குதலை தாக்கு பிடிக்குமா என்பது சவாலான விஷயமே.
அடுத்த கட்டுரையில்