கியாஸ் நிலையம் தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலி...300 பேர் படுகாயம்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (13:38 IST)
அசர்பைஜானில் கியாஸ் நிலையம்  தீப்பிடித்தது. இதில், 20 பேர்  உடல் கருகி பலியாகினர்.

தென்மேற்கு ஆசிய நாடான அசர்பையானுக்கு சொந்தமான பகுதி நாகோர்னோ –கராபாக். இது அர்மீனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்பகுதியை பிரிவினைவாதிகள் ஆட்சி செய்து வரும் நிலையில்,  இதை மீண்டும் இணைக்கக அந்த நாட்டு ராணும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே பிரிவினைவாதிகள் தப்பிச் செல்லும்போது, கியாஸ் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தங்கள் கார்களுடன் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று கியாஸ் நிலையம் தீப்பிடித்தது. இதில், பல கார்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டனர். இவ்விபத்தில், 20 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்