நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரயில்.. மதுரா ரயில் நிலையத்தில் பரபரப்பு..!
புதன், 27 செப்டம்பர் 2023 (09:11 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் மின்சார ரயில் திடீர் என தடம்புரண்டு நடைமேடையில் ஏறி நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பிசியாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த மின்சார ரயில் தடம் புரண்டு நடைமேடைக்கு ஏறியது.
மின்சார ரயில் தடம் புரண்டு நடைமேடையில் ஏறியதை பார்த்த அந்த பகுதியில் உள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் ரயிலில் இருந்தவர்களுக்கோ, நடைமேடையில் இருந்தவர்களுக்கோ அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்