29 மாதங்களில் 217 டோஸ்.. கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு பக்கவிளைவா?

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (07:37 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் இருந்த நிலையில் ஒரே ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடவே பலர் யோசித்த நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் 200க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும் அவருக்கு எந்தவிதமான பக்க விளைவும் இன்றி நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெர்மனியை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் கடந்த 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தடுப்பூசியை செலுத்தி கொண்ட அவர் கடந்த ஆண்டு நவம்பர் வரை தொடர்ந்து 217 முறை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதாகவும் நான்கு நாள் இடைவெளிக்கு ஒருமுறை அவர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி இவர் 8 நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை மாறி மாறி செலுத்தி கொண்டு இருந்தார் என்றும் இந்த தடுப்பூசியால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தாலும் அவருக்கு எந்தவிதமான பக்க விளைவு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

200க்கும் அதிகமான முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டும் அவருக்கு எந்தவிதம் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்