ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு… தண்டனையை அறிவித்த நீதிபதிகள்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (09:06 IST)
அமெரிக்காவை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாயிட் என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் ஜார்ஜின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் காரணமாக அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கருப்பினத்தவர்கள் போராட்டம் செய்ததால் கொரோனா பரபரப்பையும் மீறி பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இதையடுத்து கருப்பின மக்களுக்கு ஆதரவாக #BlackLivesMatter என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்நிலையில் பிளாயிட் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நான்கு காவலர்களும் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டன. டெரிக் ஸ்யவின் கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஃபிலாய்டின் கழுத்தில் முழங்காலால் அழுத்தி நெறித்துக் கொலை செய்தார்.

இவர் மீதான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை விசாரிக்கும் 12 நீதிபதிகள் அடங்கிய குழுவினர், ஃபிளாயிட் கொல்லப்பட்டது அமெரிக்க வரலாற்றில் கொடூரமான நிகழ்வு. இந்த வழக்கில் டெரிக் சாவின் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதையடுத்து இப்போது டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்