நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி.. பிரான்ஸ் அரசு கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (07:54 IST)
பிரான்ஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அந்த தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது என கூறப்படும் தகவல் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில், நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசு ஒன்று கவிழ்வது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

பிரான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 பேர் இருக்கும் நிலையில், அதில் 331 பேர் பிரதமர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், அதிபர் மேக்ரான் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு நிதி மசோதாவை சிறப்பு அதிகாரத்தின் மூலம் அதிபர் மேக்ரான் நிறைவேற்ற முயன்றதால், எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்ததாகவும், அதன் காரணமாக  தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்