விரைவில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை!!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (12:58 IST)
2040-ல் பிரான்ஸ் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது என தெரியவந்துள்ளது.
 
பாரீஸ் பருவநிலை மாறுபாடு மாநாட்டு ஒப்பந்தத்தின் படி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை 2022-ம் ஆண்டுக்குள் மூடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
2025 ஆம் ஆண்டுக்குள் அணுமின் சக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் 2050-ல் பிரான்ஸ் முற்றிலும் எரிசக்திக்கு மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
பிரான்ஸை போல மற்ற ஐரோப்பிய நாடுகளான நார்வே, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவையும் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளன.
 
அடுத்த கட்டுரையில்