தென் கொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் பில் சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 92.
கிம் ஜாங் பில் முதுமை சார்ந்த நோய்களால் சில வருடங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், கிம் ஜாங் பில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மரணம் அடைந்த கிம் ஜாங் பில் 1971 - 1975ம் வருடம் மற்றும் 1998 - 2000ம் ஆகிய வருடங்களில் தென் கொரிய அதிபராக பதவி வகித்தவர். பிரதமராக இருந்தபோது, நாட்டின் உளவு பிரிவை உருவாக்கி அதற்கு தலைமையேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.