பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (16:23 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்று ரேஞ்சர் படையினர் கைது செய்துள்ளனர்.



பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு முன்னாள் பிரதமர் இம்ரான் ஆட்சியின் போது, அதிக சொத்துகள் சேர்த்ததாகவும்,  ஊழல் செய்ததாகவும், வெளிநாட்டில் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, இவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இவர் ஆளும் அரசிற்கு எதிராக கருத்துகள் கூறுவதும் விமர்சிப்பதுமாக இருந்தார். இந்த நிலையில், சில வழக்குகள் தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராகும் பொருட்டு அவர் லாகூரில் இருந்து  வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று நீதிமன்றம் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் இம்ரான் கானை கைது செய்தனர்.

அவரை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இம்ரான் கானின் கட்சியினர் அவரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும், துன்புறுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்