ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் தெரிந்தது.. எஃப்.பி.ஐ தீவிர விசாரணை..!

Siva
ஞாயிறு, 14 ஜூலை 2024 (12:13 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் தெரிந்ததாகவும், ட்ரம்ப்பிற்கு எதிராக படுகொலை முயற்சி நடந்ததை எஃப்.பி.ஐ உறுதிப்படுத்தியதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் படுகொலை முயற்சிக்கான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வரும் எஃப்.பி.ஐ  அதிகாரிகள் விரைவில் இதுகுறித்த தகவல்களை ஊடகங்களுக்கு சொல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டவர் பெயர் தாமஸ் குரூக்ஸ் என்றும் 20 வயதான அவர்தான் துப்பாக்கியால் சுட்டார் என்பதை எஃப்.பி.ஐ  உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே தாமஸ் குரூக்ஸ் உயிரிழந்ததாகவும் அவருடைய பின்னணி மற்றும் அவருடைய குடும்பத்தின் பின்னணி குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

முதல்கட்ட விசாரணையில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் 120 முதல் 150 மீட்டர் தொலைவிலிருந்து துப்பாக்கியால் சுட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் பைடன் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும், இந்த ஆலோசனையில் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியில் வெளிநாடு சம்பந்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்