விடாமல் துரத்தும் பாம்புகள்! தொடர்ந்து 7வது முறை கடி! உயிர்பயத்தில் இளைஞர்!

Prasanth Karthick

ஞாயிறு, 14 ஜூலை 2024 (10:06 IST)

உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து பாம்பு கடியால் அவதிப்பட்டு வரும் இளைஞரை இந்த வாரமும் பாம்பு 7வது முறையாக கடித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் பதேபூரை சேர்ந்த இளைஞர் விகாஸ் துபே. இவரை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆங்காங்கே பாம்புகள் கடித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீட்டிலிருக்காமல் தனது சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அவர் சென்றபோது அங்கும் பாம்புகள் அவரை கடித்துள்ளது.

முக்கியமாக வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில்தான் பாம்புகள் அவரை கடித்து வருகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு முறை பாம்பு கடிக்கும்போது அவர் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்து உயிர் பிழைத்து வருகிறார். கடந்த வாரம் வரை 6 முறை கடிப்பட்டிருந்த விகாஸ் துபேவை இந்த வாரம் 7வது முறையாக ஒரு விஷப்பாம்பு கடித்துள்ளது.
 

ALSO READ: நாகர்கோவில் - தாம்பரம் ரயில் இன்று ரத்து.. மறுமார்க்க ரயிலும் ரத்து..!

தொடர்ந்து 9வது முறை அவர் கடிபடும்போது இறந்துவிடுவார் என பாம்பே கனவில் வந்து அவரிடம் சொன்னதாக விகாஸ் துபே கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் இன்னும் 2 முறை அவரை பாம்பு கடித்தால் அவர் இறந்துவிடுவார் என நம்பப்படுகிறது. 

பாம்பு அவரை மட்டும் தொடர்ந்து கடிப்பதன் காரணம் என்ன? மீண்டும் பாம்பு கடிக்காமல் அவர் காப்பாற்றப்படுவாரா? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்