பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

Prasanth K

வியாழன், 31 ஜூலை 2025 (11:34 IST)

பூமியை நோக்கி பெரிய அளவிலான விண்கல் ஒன்று வந்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது ஏலியன் விண்கலமாக இருக்கலாம் என சிலர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வரும் நிலையில் அவ்வபோது சூரிய மண்டலத்திற்குள் புகும் பெரிய அளவிலான விண்கற்கள் சில சூரியனை சுற்றி மீண்டும் மண்டலத்தில் இருந்து வெளியேறுகின்றன. கடந்த ஜூலை 1ம் தேதியன்று விண்வெளியை ஆய்வு செய்தபோது வான்வெளி ஆய்வாளர்கள் புதிய விண்கல் ஒன்றை கண்டறிந்தனர்.

 

3I/ATLAS என பெயரிடப்பாட்டுள்ள அந்த விண்கல் மணிக்கு 2,10,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. 24 கிலோ மீட்டர் நீளமுடைய அந்த விண்கல்லின் மேற்பகுதி பனியாலும், வாயுக்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்த விண்கல் 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

 

இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞான ஆய்வாளர் அவி நோயெப் மற்றும் அவரது குழு, விண்ணில் வருவது ஒரு ஏலியன் விண்கலமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விண்கற்கலை போல அல்லாமல் பறக்கும் தட்டு போன்ற அமைப்புடைய அந்த விண்கல்லின் தோற்றம், மற்ற விண்கற்களை விட அதிவேகமாக பயணிக்கும் அதன் ஆற்றல் போன்றவை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.

 

இந்த குழுவினர் 2019ல் பூமி அருகே கடந்து சென்ற முவாமுவா (Oumuamua) போரிசோப் (Borisov) உள்ளிட்ட விண்கற்களே ஏலியன் விண்கலமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்திருந்தனர். தற்போது வரும் இந்த அட்லஸ் விண்கல்லும் புதன், வியாழன், செவ்வாய் மற்றும் பூமியின் அருகே கடந்து செல்வது ஏலியன்கள் நம்மை உளவு பார்க்கும் யுக்தியாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

ஆனால் இதை மற்ற விஞ்ஞானிகள் குழு மறுத்துள்ளன. இவை கற்பனை வாதங்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இந்த கருத்துகளுக்கு எந்த சான்றும் இல்லை என்று கூறியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்