போரினால் பிரிந்தவர்களை இணைக்கும் நிகழ்ச்சி: கொரிய அரசுகள் முடிவு!
சனி, 23 ஜூன் 2018 (10:24 IST)
கொரியாவில் கடந்த 1950 முதல் 1953 வரை மூன்று ஆண்களுக்கு போர் நடந்து, போருக்கு பின்னர் கொரிய நாடு வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டாக பிரிந்தது. இதனால் பல மக்கள் தங்களது குடும்பத்தினரை பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கொரியாவில் நடந்த போரின் காரணமாக பிரிந்த குடும்பத்தினரை வரும் ஆகஸ்ட் மாதம் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பிரிந்த குடும்பங்களை சந்திக்க வைப்பதற்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 20 முதல் 26 ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
தென் கொரியாவிலிருந்து 100 பேரும், வட கொரியாவிலிருந்து 100 பேரும் கலந்து கொள்ளவுள்ளனர். யார் யார் குடும்பங்கள் சந்திக்க போகின்றன என்ற பட்டியல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்படுமாம்.
செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் முயற்சியால் இந்த நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு போரால் பிரிந்த குடும்பத்தினர் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.