
அரசு முறை பயணமாக ஆசிய நாடுகள் வந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பானுடன் ஏற்படுத்தியுள்ள புதிய ஒப்பந்தங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிவிதிப்பு காரணமாக சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் வலுவடைந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அரியவகை காந்த தயாரிப்புக்கான தனிமங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதியாகி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதில் சீனா கட்டுப்பாடுகளை விதித்தது.
இதில் ட்ரம்ப் இறங்கி வந்து பேசியும் சீனா மசியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மலேசியாவில் நடைபெறும் ஆசியன் மாநாட்டிற்கு வந்த ட்ரம்ப் அங்கிருந்து புறப்பட்டு நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.
அங்கு ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சியை சந்தித்த ட்ரம்ப் அமெரிக்கா - ஜப்பான் உறவை வலுப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். முக்கியமாக காந்த கனிமப்பொருட்களை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேலும் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் சீனாவும், ஜப்பானும் உலகளாவிய போட்டியாளர்களாக உள்ளனர். எனினும் சீனா மலிவு விலையில் அவற்றை தருவதால் முன்னணியில் நீடிக்கிறது. இந்நிலையில் ஜப்பானை வைத்து சீனாவின் வணிக ஆதிக்கத்தை முடித்துவிடும் ட்ரம்ப்பின் முதல் படியாக இந்த ஜப்பான் சந்திப்பு பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K