வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சமீபத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்பை சிங்கப்பூரில் சந்தித்தார். இருநாடுகளுக்கும் மத்தியில் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், இந்த சந்திப்பு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆனால், அமெரிக்க தரப்போ, முழுமையாக அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டதை உறுதி செய்த பின்னரே பொருளாதார தடை நீக்கப்படும் என திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்நிலையில், வடகொரியா அதிபர் சீன அதிபரை சந்திப்பதற்காக அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் இரண்டு நாட்களுக்கு தங்கவுள்ளார். இந்த சந்திப்பில் பல முக்கிய பிரச்சனைகள் குறித்தும், அணு ஆயுதம் குறித்தும், இனி வரும் நாட்களில் வடகொரியா பாதுகாப்பு குறித்தும் பேசப்பட உள்ளதாம்.
ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் தொடர்பான விஷ்யங்களி மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாடுகளும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த ஒரு சூழ்நிலையில், வடகொரியா அதிபர் டிரம்ப்பை சந்தித்த சில நாட்களிலேயே சீனா சென்றுள்ளது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.