200 ஆப்புகளை நீக்கிய பேஸ்புக்: இதுதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (18:10 IST)
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். இந்நிறுவனம், விளம்பரம் உள்ளிட்டவை பல்வேறு வருவாய் ஆதாரங்களை கொண்டுள்ளது. 
 
பேஸ்புக் நிறுவனத்தின் வாயிலாக அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல் பகிரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் சீஇஓ மார்க் சூகர்பெர்க் இது போன்று மீண்டும் தவறுகள் நடக்காமல் தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.
 
தகவல் திருடப்பட்டது தெரிந்ததும், உலகம் முழுவதும் பேஸ்புக் குறித்த அச்சம் அனைவர் மத்தியிலும் உண்டானது. இதையடுத்து, அமெரிக்க அரசு இதுதொடர்பாக விசாரணையும் மேற்கொண்டது. 
 
இந்த புகார்களை சரிசெய்யும் விதமாக, பயனர்களின் தகவல்களை திருடும் அப்ளிகேஷன்கள் பற்றி தனிப்பட்ட விசாரணையை மேற்கொண்டது பேஸ்புக். 
 
இந்த விசாரணையில், சுமார் 200 பேஸ்புக் ஆப்கள் பயனர்களின் தகவல்களைத் திருடுவதாகவும் கண்டறியப்பட்டது. இந்த ஆப்கள் பேஸ்புக்கிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்