ஃபேஸ்புக் டேட்டிங் எப்படி செயல்படும்?

திங்கள், 7 மே 2018 (14:04 IST)
ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ள ஃபேஸ்புக் டேட்டிங் எப்படி செயல்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 
ஃபேஸ்புக் பயனர்கள் அவர்களது கணக்கு மூலம் புது ஃபேஸ்புக் புரொபைல் உருவாக்கிக் கொள்ள முடியும். உங்கள் அருகில் அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் அது உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
 
நீங்கள் அந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தால், அந்த நிகழ்வில் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த நபர்கள் குறித்த விவரத்தை பார்க்க முடியும். இதன்மூலம் அவர்களும் உரையாடலாம். ஆனால். வீடியோ கால், வாய்ஸ் கால் எதுவும் செய்ய முடியாது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டும்தான் செய்ய முடியும்.
 
இதன்மூலம் பயன்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போது எளிதாக பழக உதவியாக இருக்கும். இதுவே ஃபேஸ்புக் டேட்டிங்கின் செயல்பாடு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்