உருமாறிய கொரோனா எதிரொலி: இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (07:46 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது. இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை செய்துள்ளன என்பதும் இங்கிலாந்து நாடும் தன்னுடைய நாட்டில் பரவி வரும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அதிரடியாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மீண்டும் இங்கிலாந்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு என போரிஸ் ஜான்சன் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
புதிய உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இன்று நள்ளிரவு முதல் இந்த கடும் கட்டுப்பாடுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்
 
கடந்த ஆண்டு 7 மாதங்களாக ஊரடங்கால் பெரும் தொல்லைக்கு ஆளான பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக தான் இயல்பு நிலை திரும்பி வருவதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் முழு ஊரடங்கு என்பது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்