தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 10 வகுப்புகள் வரை அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. தேர்சி அறிவிக்கப்பட்ட பிறகும் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வந்தது. கொரோனா பாதிப்புகள் நீண்ட நாட்கள் நீட்டிக்க கூடியதாக இருப்பதால் தனியார் பள்ளிகள் தற்போது ஆன்லைன் வழியாகவே மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அடுத்த வாரம் திங்கட்கிழமை (ஜூன் 13) முதல் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.