இங்கிலாந்தின் பொருளாதாரம் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சி

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:30 IST)
இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்ததாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் 
 
1709ஆம் ஆண்டுக்கு பிறகு 2020 ஆம் ஆண்டில் தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11 சதவீதம் என குறைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது
 
கடந்த ஆண்டு தொடங்கி இங்கிலாந்து பொருளாதாரம் கடந்த நவம்பர் மாதம் ஓரளவு மீட்டு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது 
 
இருப்பினும் 300 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்